ஷாம் தற்போது நடித்துவரும் படம் ‘கா-வியன்’. இப்படம் முழுக்க முழுக்க பிரமிப்பின் தலைநகரமான லாஸ் வேகாஸில் படமாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சிவா தலைமையில் ஒரு அதி பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி, லாஸ் வேகாஸில் மக்கள் அதிகம் கூடும் வீதிகளில் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
ஸ்டண்ட் சிவா கடும் ரிஸ்க் எடுத்து ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த சண்டைக்காட்சி படம் வெளியானதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்கிறார்கள் படக்குழுவினர். பார்த்தசாரதி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கிறார்.