இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ‘3’ படத்துக்குபின் தமிழ்ப்படங்கள் எதிலும் நடிக்காமல் பாலிவுட்டிலும் டோலிவுட்டிலும் செட்டிலாகிவிட்ட ஸ்ருதிஹாசன், இந்த புதிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்புகிறார்.
சில தினங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் ட்விட்டரில், “நான் விரைவில தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் அவர் விஷால் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது என்றே சொல்லலாம்.