மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் ‘பிரம்மோற்சவம்’. இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேற்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான்.
படக்குழுவினருக்கோ ஷாருக்கான் தங்களது செட்டுக்கு வந்ததில் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. இந்த நிகழ்வின்போது மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதாவும் மகள் சிதாராவும் மகேஷ்பாபுவுடன் இருந்தனர். தனது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தன்னை மிகவும் கௌரவப்படுத்தி விட்டதாக மகேஷ்பாபு நன்றி தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு ஷாருக்கான், “அருமையான வரவேற்பு தந்தீர்கள்.. மீண்டும் ஒருமுறை உங்களுடன் அமர்ந்து இன்னும் சில ஹைதராபாத் உணவு வகைகளை டெஸ்ட் பண்ணவேண்டும் என’ பதில் ட்வீட்டில் நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு திரையுலகங்களை சேர்ந்த சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கானும் மகேஷ்பாபுவும் ‘பிரம்மோற்சவம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக சந்தித்த நிகழ்வுதான் தற்போது ஆந்திராவில் ஹாட் டாபிக்..