‘கோச்சடையான்’ இசைவெளியீட்டு விழாவில் ஷாருக்கான்..!

வரும் மார்ச்-9ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தைப்போலவே ஒவ்வொரு விஷயங்களிலும் பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக படத்தின் இயக்குனரான ரஜினியின் மகள் சௌந்தர்யா ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழ்சினிமாவையும் தாண்டி பல மொழிகளில் உள்ள பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் சௌந்தர்யா. அந்தவகையில் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து இருப்பதை சௌந்தர்யா உறுதி செய்துள்ளார்.

இந்தி நடிகர் என்றாலும் கூட ரஜினியை பல வழிகளில் பின்பற்றுகின்ற, தன்னை ஒரு ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகின்ற ஷாருக்கான் இந்த விழாவில் கலந்துகொள்வது சிறப்பு அம்சமாக இருக்கும்.

A R RahmanAadhiDeepika PadukoneJackie SherofKochadaiyaanRajinikanthRukminiSarathkumarSoundarya Rajinikanth AshwinSuper Star Rajinikanth
Comments (0)
Add Comment