அஜித்தின் வேதாளம் டீஸர் சாதனை, அடுத்து அதை முறியடித்த விஜய்யின் ‘தெறி’ ட்ரெய்லர் சாதனை என இனிமேல் அஜித், விஜய் தான் மாஸ் என்கிற ரீதியில் சமீப காலமாக பரப்பப்பட்டு வந்த கருத்துக்களை எல்லாம் உடைத்து தலைவர் என்றால் அது எப்பவும் ரஜினி தான் என மீண்டும் ஒருமுறை ஞாபகமூட்டல் செய்துள்ளது நேற்று வெளியான ‘கபாலி’ படத்தின் டீஸர்.
இந்த செய்தியை பதிவிடும் வரை யூடியூப்பில் கபாலி டீஸரை பார்த்தவர்களின் எண்ணிக்கை சுமார் 47 லட்சத்தை தாண்டியிருந்தது.. நேற்று ‘2.O’ படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் இருந்த ஷங்கர் மற்றும் படக்குழுவினர் ‘கபாலி’ டீஸரை பார்த்து அதில் ரஜினியின் ஸ்டைலையும் கம்பீரத்தையும் படம் பக்கா ஆக்சன் பேக்கேஜாக உருவாகி இருப்பதையும் கண்டு அசந்து போய்விட்டனராம்.