ஷங்கர் ஒரு பக்கம்.. மணிரத்னம் மறுபக்கம்..!


தமிழ்சினிமாவின் இரண்டு ஜாம்பவான் இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம் இருவருமே இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது உதவிக்கரத்தை நீட்டியுள்ளார்கள்.. இதில் ஷங்கர் தனது பங்களிப்பாக பத்து லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னமோ, தனது மனைவி சுஹாசினியுடன் இணைந்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது ஒரு வாரம், பத்து நாட்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து வருகின்றார். இதற்காக மணிரத்னமே நேரில் சென்று மெடிக்கல் ஸ்டோரில் சானிட்டரி நாப்கின் வாங்கிய காட்சி சோஷியல் மீடியாவில் வெளியானது.

இதுவரை அவர் கடைக்குச்சென்று எங்கள் குழந்தைக்காக பொருட்கள் வாங்கியதை கூட நான் பார்த்ததில்லை என சுஹாசினியே ஆச்சர்யப்படும் அளவுக்கு மணிரத்னம் களப்பணிகளுக்காக இறங்கி வேலைபார்ப்பது ஆச்சர்யம் கலந்த சந்தோசம் தான்.

ChennaiChennai FloodChennai Flood ReliefManirathnamShankarSuhasini