பொதுமேடையில் ஷாருக்கானை அதிர வைத்த போட்டியாளர்..!

நம் தமிழ் சேனல்களில் நடைபெறுவது போலவே சூப்பர் சிங்கர் போட்டிகள் மும்பை சேனல்களிலும் பிரசித்தம்.. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை பாலிவுட்காரர்கள் தங்களது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கம் தான்.

அந்த வகையில் கடந்த வாரம் ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஜப் ஹேரி மெட் என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சேனல் ஒன்றின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஷாருக்கான். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் வி.ஜி என்கிற வைஷ்ணவ் கிரிஷ் ஷாருக்கானின் ‘ராய்ஸ்’ படத்தில் இருந்து ‘ஷாலிமா’ என்கிற பாடலை பாடி ஷாருக்கானை மிகவும் கவர்ந்தார்.

ஷாருக்கான் உட்பட்ட அனைவரும் வைஷணவ்வை பாராட்ட, அப்போது “சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனை நீங்கள் அலேக்காக தூக்கியது போல நானும் உங்களை ஒருமுறை தூக்க ஆசைப்படுகிறேன்” என ஷாருக்கிடம் வேண்டுகோள் வைத்தார். “இது என்னடா புதுசா இருக்கே இதுநாள் வரை இப்படி ஒரு கோரிக்கையை என்னிடம் யாரும் வைத்ததில்லையே” என கூறிய ஷாருக்கும் அதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்…

Shahrukh KhanSupersingerஜப் ஹேரி மெட்ராய்ஸ்வைஷ்ணவ் கிரிஷ் ஷாருக்கான்ஷாலிமா