போலீஸ் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சேதுபதி’..!

தமிழ்சினிமாவின் இப்போதைய தலையாய பிரச்சனை டைட்டில் தான்.. ஒரு கண்ணாடி ஸ்கேல் அளவு நீளத்துக்கு டைட்டில் வைப்பதாகட்டும், ஒற்றை எழுத்தில் பெயர் வைப்பதாகட்டும் தலையை போட்டு பிய்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை கைப்பற்றும் அதிர்ஷ்டத்துக்கு சொந்தக்காரரான விஜய் சேதுபதி தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு, ரொம்பவும் மெனக்கெடாமல் ‘சேதுபதி’ என அவரது பெயரில் இருந்தே பாதியை உருவி டைட்டிலாக வைத்துள்ளார்கள்.

இந்தப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் ஆபிசர் கேரக்டரில் நடிக்கிறார். இருபது வருடங்களுக்கு முன்னர் கேப்டன் விஜயகாந்த் இதே டைட்டிலில் போலீஸ் அதிகாரியாக நடித்த வரலாறும் உண்டு. ‘பீட்சா’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்தில் இரண்டாவது முறையாக விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் ரம்யா நம்பீசன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

கேப்டன் விஜயகாந்த்சேதுபதிபண்ணையாரும் பத்மினியும்பீட்சாரம்யா நம்பீசன்விஜய் சேதுபதி