செப்-`8ல் நெருப்பு(டாவு)டன் மோதும் கதாநாயகன்…!

விக்ரம் பிரபு நடிகனாக இருந்து தற்போது ‘நெருப்புடா’ படம் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.. அறிமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கும் இந்தப்படத்தில் பயர்மேனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவு செய்கிறார்..

இந்தப்படம் வரும் செப்-8ஆம் தேதி ரிலீசாகிறது.. இதே தேதியில் தான் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கதாநாயகன்’ படமும் ரிலீசாகிறது. அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கேத்ரின் தெரசா, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை விஷ்ணுவே தயாரித்துள்ளார்..

ஆக, இரண்டு கதாநாயகன்களும் தயாரித்துள்ள படம் ஒரே தேதியில் மோதுகிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்.. ஆனால் இருவருக்குமே வெற்றி கிடைக்கட்டும்.

அசோக் குமார்ஆர்.டி.ராஜேசகர்கதாநாயகன்கேத்ரின் தெரசாசூரிநிக்கி கல்ராணிநெருப்புடாமுருகானந்தம்விக்ரம் பிரபுவிஷ்ணு விஷால்ஷான் ரோல்டன்