ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படும் சென்ராயன்..!

 

ஒரு சின்ன படத்தின் டீசருக்கே இவ்வளவு பப்ளிசிட்டி கிடைக்குமா..? யூ டியூப்பில் லட்சம் லட்சமாக பார்வையாளர்களை வரவழைக்க முடியுமா..? ஆனால் நடந்திருக்கிறதே ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்திற்கு.. அதற்கு முழு முக்கிய காரணம் ‘மொட்டத்தலை’ ராஜேந்திரன் தான். அஜித் டயலாக்கை அவர் பேசி நடித்திருந்த இந்தப்படத்தின் டீசர் ட்ரெண்டிங் ஆனது.

இந்தப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சின்னத்திரை தொகுப்பாளர் தீபக் படத்திலும் தொகுப்பாளராகவே நடிக்கிறார். நேகா கதாநாயகியாக நடிக்கிறார். சின்னத்திரையில் வெற்றிகரமான காமெடி  தொடர்களை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இயக்கும் இந்தப்படத்தில் ‘மூடர்கூடம்’ சென்ராயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் எப்படியாவது ஹாலிவுட் படத்தில் நடித்துவிடவேண்டும் என்கிற லட்சியத்திற்காக, கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் ‘மெல்ட் பாண்டி’ கேரக்டர் அவருடையது.

கானா பாலா இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியதோடு, ஆடியும் இருக்கிறார். வரும் மார்ச்-13ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இந்தப்படத்தின் வசனகர்த்தா கார்த்திக், தனக்கு வசனம் எழுதி பழக்கமில்லை என்றும் நன்றாக பேசுவேன் என்பதாலேயே இயக்குனர் இந்த வாய்ப்பை தந்ததாகவும் குறிப்பிட்டார்.

படத்தின் தயாரிப்பாளர் தனது நண்பர்கள் 2௦ பேருடன் ஒன்றாக அமர்ந்து இந்த கதையை கேட்டு அனைவரின் முழு சம்மத்ததுடன் தான் இந்தக்கதையை ஓகே செய்திருக்கிறாராம். அந்த அளவுக்கு ணான் ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் இந்தப்படம் தரும் என்றார்கள் பேசியவர்கள் அனைவருமே.

‘மூடர்கூடம்’ சென்ராயன்‘மெல்ட் பாண்டி’‘மொட்டத்தலை’ ராஜேந்திரன்HollywoodSentrayanSEntrayan wants to act in hollywoodஇவனுக்கு தண்ணில கண்டம்எஸ்.என்.சக்திவேல்கானா பாலாசென்ராயன்தீபக்நேகாஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படும் சென்ராயன்..!