தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தில் பைக் திருடனாக அறிமுகமாகி, ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’ படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ‘மூடர்கூடம்’ இவரை கவனிக்க வைத்தது.
இப்போது சென்ராயனுக்கு திருமண யோகம் வந்துவிட்டது. பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்த சென்ராயன், இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதம் வாங்கிவிட்டார். இம்மாதம் 31ஆம் தேதி வத்தலகுண்டு அருகில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.