செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 35 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், பொங்கலுக்கு பின் தொடர்ந்து சென்னையில் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது..
அதை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக நியூயார்க் கிளம்புகிறார்கள் செல்வராகவனும் சந்தானமும்.. நியூயார்க் மற்றும் புரூக்ளின் நகரங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம்.. வெறும் பாடல் காட்சிகள் மட்டுமல்லாமல், கதையுடன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் இங்கே படமாக்கப்பட இருக்கின்றனவாம். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படம் ரொமாண்டிக் காதல் கதையாக உருவாகிறதாம்.