‘த்ரிஷா இல்லைன்னா கேத்தரின் தெரசா’ – செல்வா நெக்ஸ்ட் பிளான்..!

சிம்புவை ஹீரோவாக வைத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானபோது, த்ரிஷாவின் இன்னொரு விதமான நடிப்பை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். காரணம் செல்வராகவன் – த்ரிஷா கூட்டணியில் தெலுங்கில் உருவான ‘ஆடவாரி மாட்லாக்கு அர்த்தாலே வேறுலே’ படம் ரிலீஸாகி எட்டு வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்த்துதான்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, செல்வா படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டார்.. ஆனால் த்ரிஷா விலகியது ‘மெட்ராஸ்’ நாயகியான கேத்தரின் தெரசாவுக்கு லக்கி பிரைஸ் அடித்தமாதிரி ஆகிவிட்டது.. சிம்புவுக்கு ஜோடியாக செல்வராகவன் படத்தில் நடிப்பது என்றால் ஜாக்பாட் தானே..

கடந்த ஞாயிறு அன்று கேத்தரினை வரவழைத்த செல்வராகவன் மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்து திருப்தியாகிவிட்டார். அத்துடன் படத்தில் கேத்தரின் கேரக்டர் பற்றி அவரிடம் டீடெய்லாக சொல்லிவிட, கேத்திரினும் இப்போ ஹேப்பி அண்ணாச்சி.. வரும் வியாழக்கிழமை இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

கேத்தரின் தெரசாசிம்புசெல்வராகவன்த்ரிஷாமெட்ராஸ்