செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இன்று துவங்கியது.!


செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார் என முன்பே கூறியிருந்தோம் அல்லவா.? அந்தப்படத்திற்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என டைட்டில் வைத்து இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் படப்பிடிப்பும் துவங்கியது. முற்றிலும் புது பாணியில் உருவாகிவரும் திரைப்படம், வேறு எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன், ரெஜினா கசான்ட்ரா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர். முதன்முறையாக செல்வராகவனுடன் இசைக்கூட்டணி அமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். கெளதம் வாசுதேவ் மேனன் , செல்வ ராகவன் இணையும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன் வழங்குகிறார். இன்று துவங்கிய படப்பிடிப்பை தொடர்ந்து மார்ச் இறுத்திக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்

Escape ArtistGowtham Vasudev MenonNanthithaNenjam MarappathillaiRejinaS J SuryaSelvaragavan