விஜய்யை வைத்து ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ என மூன்று படங்களை இயக்கியவர் கே.செல்வபாரதி. இப்போது ‘காதலைத்தவிர வேறொன்றும் இல்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ‘கீரிப்புள்ள, ‘சாட்டை’ படங்களில் நடித்த யுவன் கதாநாயகனாகவும் சரண்யா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
காதலை வெறுக்கும் யுவனையும் காதலை நேசிக்கும் சரண்யா மோகனையும் அந்த காதல் என்ன செய்கிறது என்பது தான் படத்தின் கதை. தற்போது இந்தப்படத்தை காதலர்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு செல்லும் விதமாக ஒரு போட்டியை அறிவித்துள்ளார் செல்வபாரதி.
அதாவது காதலர்கள் தாங்கள்இணைந்து எடுத்த போட்டோவையும் மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் எடுத்த போட்டோவையும்( ஸ்கூல் யூனிபார்மில் இருக்கவேண்டும்) ktvi2014@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பிவைத்துவிட்டு அவர்கள் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு பதில் அனுப்பவேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு எதிர்பாராத பரிசுகள் காத்திருக்கின்றது.