பிப்-12ல் ‘சவுகார்பேட்டை’ ரிலீஸ்..!


சென்னையில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தினால் ரிலீசாகாமல் பாதிக்கப்பட்ட படங்களில் ‘சௌகார்பேட்டை’ படமும் ஒன்று.. ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடிப்பில் வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள ‘சௌகார் பேட்டை’ படம் வரும் பிப்-12ல் ரிலீஸாகும் நிலையில் தயாராகிவிட்டது. ஜான் பீட்டர் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சுமன், வடிவுக்கரசி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் தற்போது தயாரித்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. பேய் சீசனில் அடுத்து மிரட்டலாக களம் இறங்கப்போகும் இந்தப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி இருவருமே இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

Ral LakshmiSavukar PettaiShri Thenandal FilmsSri KanthSumanV C VadivudauyaanVadivukkarasi