பிரதமரிடம் சத்யராஜ் மகள் முறையீடு..!

சத்யராஜின் மகள் திவ்யா டாக்டராக பண்புரிந்து வருகிறார்.. சமீபத்தில் அவரிடம் அமெரிக்காவை சேர்ந்த சிலர் வந்து தங்களது மருந்துகளை பரிந்துரைக்குமாறு கூறியுள்ளார்கள். அதற்கு லஞ்சமும் கொடுக்க முன்வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கொண்டு வந்த மருந்துகளால் பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் அவற்றை பரிந்துரைக்க மறுத்துவிட்டாராம் திவ்யா.

இதனால் அவர்கள் தரப்பில் திவ்யாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளனர். இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள திவ்யா இதுபோன்ற ஆபத்தான மருந்துகளை இந்தியாவில் தடைசெய்யவேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார். அதேபோல நீட் தேர்வுகளிலும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையிலும் இன்னும் அதிக கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் திவ்யா.

DivyaModiPrime MinisterSathyaraj