அதர்வாவிற்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய சற்குணம்..!

சற்குணம் இயக்கத்தில் சண்டிவீரன் படத்தில் நடித்துவரும் அதர்வாவுக்கு இந்த கதையை சொல்லி, அதில் நடிக்க சொன்னதே இயக்குனர் பாலா தானாம். பரதேசி ஒருவிதமான கிராமத்து கதை என்றால், சண்டிவீரன் இன்னொரு விதமான கிராமத்து கதை என்கிறார் அதர்வா.. அதர்வாவுக்கு ஜோடி ‘கயல்’ ஆனந்தி. படத்தின் டைட்டிலும் போஸ்டரும் ஏதோ சீரியஸ் படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், பக்கா கமர்ஷியல் படமாகத்தான் சண்டிவீரன் உருவாகியுள்ளதாம்.

தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்திய இயக்குனர் சற்குணம், தனது சொந்த ஊரிலும் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். அப்போது அதர்வாவுக்கு அவர் இதுவரை சாப்பிட்டிராத, சில புதுவிதமான கிராமத்து நான் வெஜ் அயிட்டங்களை வீட்டில் இருந்தே செய்து கொண்டுவரச்சொல்லி சாப்பிடவைத்து அசத்தினாராம் சற்குணம்..

அதர்வாஆனந்திகயல்சண்டிவீரன்சற்குணம்பரதேசிபாலா