நடிகர் சங்க தேர்தல் நெருங்கிவரும் வேளையில் விஷால் அணியினரும் சரத்குமார் அணியினரும் பரப்பரப்பாக வேலை செய்து வருகின்றனர்.. இரண்டு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவாக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் விஷால் அணியினர், ரஜினி, கமல் ஆகியோரை சந்தித்து தங்கள் பக்கம் உள்ள கோரிக்கைகளையும் நியாத்தையும் கூறி வரும் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்போது சரத்குமாரும் இன்று ரஜினியை சந்தித்து ஒருமணி நேரம் பேசிவிட்டு வந்துள்ளார்.. ஆனால் “தேர்தலை முன்னிட்டு நான் ரஜினியை சந்திக்க செல்லவில்லை. நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்கள் தான். இந்த சந்திப்பின்போது நடிகர்சங்க தேர்தல் பற்றியும், ரஜினியின் கபாலி படம் பற்றியும் பேசினோம்” என்கரு சரத்குமார் கூறியுள்ளார்.