நிவின்பாலியை காப்பற்றிய சரத்குமார்..!


நேரம் என்கிற ஒரே ஒரு தமிழ்ப்படத்தில் மட்டுமே நடித்த நிவின்பாலி, தமிழில் நடித்த சமயத்தில் நேரம் சரியில்லாமல் ஏதாவது சிக்கலில் மாட்டி, அப்போது நடிகர்சங்க தலைவராக இருந்த சரத்குமார், அவரை இக்கட்டில் இருந்து காப்பற்றியிருப்பாரோ என்கிற அளவுக்கு கற்பனை குதிரையை பறக்கவிட வேண்டாம். இது மேட்டரே வேற..!

2௦11ல் மலையாளத்தில் பிபின் பிரபாகர் இயக்கத்தில் வெளியான ‘தி மெட்ரோ’ படத்தில் ஒரு ரவுடி கும்பலை சீண்டி மாட்டிக்கொள்ளும் நான்கு இளைஞர்களை போலீஸ் அதிகாரியான சரத்குமார் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. அதில் ஒருவர் தான் நம் நிவின்பாலி.. கிட்டத்தட்ட ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் என்பதால் படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

சரி, அதுக்கு என்ன இப்ப என்கிறீர்களா..? இந்தப்படத்தை தான் இப்போது தமிழில் ‘தென்னிந்தியன்’ என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். முக்கிய காரணம் அதில் சரத்குமார், பாவனா, நிவின்பாலி என தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்த முகங்கள் இருப்பது தான். இந்தப்படத்தில் பாவனா சரத்குமாரின் தங்கையாக நடித்துள்ளார். ரீமேக் ஜுரத்தில் இருப்பதால், மலையாளப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் மோகம் குறைந்து இருந்தது. அதை இந்தபடம் மீண்டும் துவக்கி வைத்துவிட்டது.

BavanahNivin PaaliSarathkumarThennindian