வெகு விரைவில் ‘சரபம்’ ரிலீஸ்..!


‘பீட்சா’, ‘தெகிடி’ வரிசையில் இன்னொரு க்ரைம் த்ரில்லராக சிவி.குமாரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘சரபம்’. சமஸ்கிருத வார்த்தையான ‘சரபம்’ என்றால் தமிழில் ‘யாழி’, அதாவது சிங்கப்பறவை என்று அர்த்தமாம். சரபம் படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும் அந்த மிருகத்தின் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எதிர்ப்பாரா விதமாக நடக்கும் ஒரு பிரச்சனை படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை இணைக்கிறது, பிறகு அவர்களுக்குள் நடப்பது என்ன? என்பது விறுவிறுப்பான திரைக்கதை. இந்தப்படத்தை இயக்கியுள்ள அருண்மோகன் வேறு யாருமல்ல, இயக்குனரும் காமெடி நடிகருமான அனுமோகனின் மகன் தான்.

பிரம்மன் படத்தில் சசிகுமாரின் நண்பனாக நடித்த நவீன் சந்திரா தான் ஹீரோ,. அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த சலோனி நடிக்க, ஆடுகளம் நரேனுக்கும் இதில் முக்கியமான வேடம் இருக்கிறது. இந்தப்படத்தின் ஷூட்டிங்கை 29 நாட்களிலேயே முடித்துவிட்டாராம் இயக்குனர் அருண்மோகன்.. உலகமெங்கும் இப்படத்தை ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் விநியோகம் செய்கிறது.

 

 

‘சரபம்’‘தெகிடி’Sarabhamபீட்சா