சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் கூட்டணியில் அடுத்த அதிரடியாக உருவாகி வருகிறது ‘காலா’. இந்தப்படம் வரும் ஏப்-27ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கபாலி’ படத்தில் ரஜினி ரசிகர்களின் நாடி நரம்பையெல்லாம் ‘நெருப்புடா’ பாடல் மூலம் முறுக்கேற வைத்த இயக்குனர் சந்தோஷ் நாராயணனுக்கு ரஜினி படத்திற்கு இரண்டாவது முறையாக இசையமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது ‘காலா’.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் காலா பாடல்கள் பற்றி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ‘காலா’ ரஜினிக்கான அறிமுக பாடல் 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா? அல்லது 1990 முதல் 2000 காலகட்டத்து பாடல் போல இருக்க வேண்டுமா?
இல்லை என்றால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி வேண்டுமா? இல்லை எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா?’ என்று ரசிகர்களிடமே கேள்விகளை கேட்டுள்ளார்.
இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் எல்லா காலகட்டமும் கலந்த கலவையாக ஒப்பனிங் பாடல் இருக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.