சந்தானம் நடித்த படங்களில் அவருடன் நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷும் இடம் பிடித்திருந்தால் அவர்கள் இருவரின் காமெடி மட்டுமே தனியாக ரசிகர்களை அதிரவைக்கும்,,, வானம், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாலு, இனிமே இப்படித்தான் உட்பட இவர்கள் கூட்டணியில் உருவான படங்கள் சிரிப்புக்கு நூறு சதவீதம் கியாரண்டி தந்தவை..
அந்தவகையில் சந்தானத்துக்கும் விடிவி கணேஷுக்குமான நட்பு சினிமாவையும் தாண்டி, வெளியிலும் தொடர்வது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த நட்பின் அடிப்படையில் தான் இப்போது விடிவி கணேஷ் தயாரிக்கும் புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம். இந்தப்படத்தை சேது என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.