சைக்கிளில் வீலிங் செய்த சந்தானம்..!

தான் கதாநாயகனாக நடித்துவரும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார் சந்தானம். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றபோது காமெடியான சம்பவம் ஒன்று நடந்தது.

காட்சிப்படி சந்தானம் வீடுவீடாக சென்று தண்ணீர் கேன்களை சப்ளை செய்யவேண்டும். கடமை உணர்வு மிக்க ஆர்ட் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த ஆட்களோ டம்மி கேன்களை வைப்பதற்காக தண்ணீர் நிரம்பிய கேன்களை சைக்கிளில் வைத்து கட்டிவிட்டார்கள்..

அப்புறம் என்ன.. கூட்டம் சேருவதற்குள் காட்சியில் நடித்துவிடவேண்டும் என்ற வேகத்தில் சந்தானம் சைக்கிளில் ஏறி உட்கார, உடனே முன் சக்கரம் ஆகாயத்தை நோக்கி தூக்கியிருக்கிறது.

தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு சந்தானம் ஏதோ சைக்கிளில் வீலிங் செய்வது மாதிரித்தான் தெரியும். நல்லவேளையாக அருகில் இருந்த பையன்கள் சைக்கிளை பிடித்து நிறுத்தி சந்தானத்தையும் கீழே விழாமல் தாங்கினார்களாம்.

BalupuIrandaam UlagamNa MuthukumarPearl V PotluriPVP Cinemas. Naan EeSanthanamSrinathVallavanukku Pullum Ayudam