பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடித்துவரும் புதிய படம் ‘சங்கு சக்கரம்’. இப்படத்தை மாரீசன் என்பவர் இயக்கி வருகிறார். இவருடன் கீதா, ஜெர்மி ரோஸ், ராக்கி, ‘பசங்க-2’ நிஷேஷ் மற்றும் 8 குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
குழந்தைகளை மையப்படுத்திய படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வரும் டிச-29ஆஅம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.