இதுபற்றி இந்தப்படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய சூரி, படப்பிடிப்பில் தான் பட்ட அவஸ்தைகளை கூறினார்.. ஆனால் அதுவும் அவர் மாடுலேசனில் கேட்கும்போது காமெடியாகவே இருந்தது.
படத்தில் பேய் ஓட்டும் கோவை சரளா ஐடியாப்படி ஜீவா, சூரி இருவரும் வாழை இழையால் மட்டும் இடுப்புக்கு கீழே மறைத்துக்கொண்டு ஊருக்குள் வலம்வரும் காட்சி குபீர் சிரிப்பை வரவழைக்கும்.. ஆனால் இந்த காட்சியை படமாக்கியபோது, ஆர்ட் டிபார்ட்மெண்ட் ஆட்கள், ஹீரோ என்பதால் ஜீவாவுக்கு வாழை இலையையும் சூரிக்கு டிபன் இலையையும் கொடுத்து கட்டிக்கொள்ள சொல்லிவிட்டார்களாம்.
அதுமட்டுமல்ல தெருவில் ஓடும்போது துரத்துவதற்கு இரண்டு நாய்களை செட் பண்ணி வைத்திருந்தார்களாம்.. ஆனால் காட்சியை படமாக்கும்போது தெருவில் இருந்து இன்னும் நான்கைந்து நாய்கள் சேர்ந்துவிட ஒரே களேபரமாகி விட்டதாம்.. எப்படியோ ஒருவழியாக நடித்து முடித்தோம் என பெருமூச்சு விடுகிறார் சூரி.