‘சண்டிக்குதிரை’ படக்குழுவினரை ஊக்கப்படுத்திய சமுத்திரக்கனி..!

பொதுவாக சின்னத்திரையில் இருந்து ஒருவர் இயக்குனராகவோ, நடிகராகவோ மாறினால் சினிமாவை சேர்ந்தவர்கள் இளக்காரமாகத்தான் பார்த்து வந்தார்கள். ஆனால் சின்னத்திரையில் இருந்து வந்த சமுத்திரக்கனி சந்தானம், சிவாகர்த்திகேயன் போன்றவர்கள் வெள்ளித்திரையில் இன்று வெற்றிகரமாக வலம் வருவதால் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்களுக்கு நம்பிக்கை கிடைத்திருப்பது உண்மை.

அப்படி வந்தவர்களால் உருவாகி இருக்கும் படம் தான் ‘சண்டிக்குதிரை’. ஆம். இந்தப்படத்தின் இயக்குனர் அன்புமதி, நடிகர் ராஜ்கமல் இருவரும் சின்னத் திரையிலிருந்து வந்திருக்கிறார்கள். கதாநாயகியாக மானசா நடிக்கிறார் இயக்குனர் அன்புமதி பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குனராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். மேலும் நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.

‘நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய’ என்கிற சூப்பர்ஹிட்டான சாமி பாடலை கேட்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்தப்பாடல் உட்பட 6000 பாடல்களுக்கு எழுதி இசையமைத்த வாரஸ்ரீ என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி, ரவிமரியா, ஜாக்குவார் தங்கம், லியாகத் அலிகான், அரவிந்தராஜ், கஞ்சா கருப்பு உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி பேசும்போது, “நான் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தபோது, ஒரு பெரிய நடிகரிடம் கதை சொன்னேன், கதை நன்றாக இருக்கு.. சின்னத்திரை இயக்குனர் மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொண்டு விடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி வெளியே அனுப்பினார். இன்று நான் இயக்குனராகவும், நடிகராகவும் நிற்கிறேன்… அதனால் வெற்றி உங்கள் அருகில் தான் இருக்கு” என படக்குழுவினரை ஊக்கப்படுத்தி பேசினார்.

SamuthirakaniSandikuthiraiஅரவிந்தராஜ்கஞ்சா கருப்புகே.எஸ்.ரவிக்குமார்சமுத்திரக்கனிஜாக்குவார் தங்கம்ரவிமரியாலியாகத் அலிகான்