பூஜையுடன் துவங்கியது சண்டகோழி 2 படப்பிடிப்பு..!

2005 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி… ஆக்சன் பிரியர்களின் மத்தியில் இன்றும் இந்தப்படத்திற்கான வரவேற்பு குறையவேயில்லை. இன்று இத்திரைப்படத்தை எங்கு திரையிட்டாலும் தியேட்டரில் கூட்டம் கலைகட்டும். தொலைக்கட்சியில் ஒளிபரப்பானால் டி.ஆர்.பி ரேடிங் அதிகமாகும்.

இதைப்போல் பல சாதனைகளை வசூல் ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் படபிடிப்பு ஆரம்பமானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கூட்டணியான விஷால்–லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது…

தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில், விஷால். ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரான ராஜ்கிரணும் இன்று நடைபெற்ற பூஜையில் பங்குபெற்றார், இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஷால் பிலிம் பேக்டரி மூலமாக விஷாலே இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

LingusamyRajkiranSandakozhi 2Vishalசண்டக்கோழி-2லிங்குசாமிவிஷால்