சமுத்திரக்கனியின் பெருந்தன்மை..!

 

ஒவ்வொரு நிமிடத்தையும் பணமாக்க துடிக்கும் இன்றைய சூழலில் ஒரு சிலர் மட்டும் பணம் வாங்காமல் இந்தப்படத்தில் நடித்தார்கள், அந்தப்படத்தில் நடித்தார்கள் என அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு… காரணம் தனது நண்பர்களுக்காக உதவுவது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அந்தப்படத்தில் தனது கதாபாத்திரம் தனக்கு லைப்டைம் கேரக்டராக இருக்கும் என்பதுதான் மிக முக்கியமான காரணமாக இருக்கும்.

இந்தப்பட்டியலில் அவ்வப்போது இடம்பெறுபவர்தான் சமுத்திரக்கனி.. இந்தமுறை அவர் பணம் எதுவும் வாங்காமல் நடித்திருப்பது ‘காமராஜர் – தி கிங் மேக்கர்’ படத்திற்காக.. தந்து வாழ்நாளெல்லாம் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அந்த தலைவர் பற்றி உருவாகும் படத்தில் நடிப்பது அவருக்கு செலுத்தும் காணிக்கை என்றே நினைக்கிறார் சமுத்திரக்கனி..

ஏற்கனவே 2௦௦4லிலேயே இந்தப்படம் முதன்முதலாக வெளியாகி இருந்தாலும், இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியாவதால், சமுத்திரக்கனி நடிக்க சில காட்சிகளை புதிதாக எடுத்து இணைத்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா இசையில் ஏ.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது

இசைஞானி இளையராஜாஏ.பாலகிருஷ்ணன்காமராஜர் – தி கிங் மேக்கர்சமுத்திரக்கனி