தான் இயக்கிய முதல்படத்தின் மூலமே, தமிழ்சினிமாவில் தனது வரவை வித்தியாசமாக பதிவுசெய்ததோடு, மணிரத்னம், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களால் வான்ட்டடாக பாராட்டப்பட்டவர் ‘மூடர்கூடம்’ நவீன்.. அந்தப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்ததோடு, படத்தை தயாரித்ததும் நவீன் தான். தற்போது தனது உதவியாளரான தனராம் சரவணன் என்பவர் இயக்கும் படத்தை தயாரிக்கிறார்..
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் மூடர்கூடம்’ படத்தில் இடம்பெற்ற ராஜாஜி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாம். மூடர்கூடம் படத்திற்கும் இதற்கும் எந்த ஒரு சாயலும் இல்லாமல், கிராமத்து பின்னணியில் கதை பின்னப்பட்டுள்ளதாம்.