‘நண்பேன்டா’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் உதயநிதி. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாராவே நடிக்கிறார். இந்தப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக ‘என்றென்றும் புன்னகை’ பட இயக்குனர் அஹமது இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி.
இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அதற்கு சமந்தாவின் கால்ஷீட் டைரி இடம் கொடுக்குமா என்றுதான் தெரியவில்லை. காரணம் தற்போது விஜய்யுடன் ‘கத்தி’, சூர்யாவுடன் ‘அஞ்சான்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சமந்தா.
இதுதவிர தெலுங்கிலும் கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கிறார் சமந்தா. அடுத்ததாக விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஆக இந்த தேதிகளையும் தாண்டி உதயநிதி படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு அமையுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.