பாதியில் வெளியேறினார் சல்மான் கான்..!


பாலிவுட்டின் நம்பர்-1 வசூல் சக்கரவர்த்தி சல்மான் கான் தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும்போதே பல படங்களில் சிறப்புத்தோற்றத்தில் நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தருவதிலும் நம்பர்-1 அவர்தான் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

அந்தவகையில் சுமார் 21 படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் அவர் அதில் 14 படங்களில் நடிகர் சல்மான் கானாகவே வந்துபோயிருக்கிறார்.. இதையெல்லாம் சம்பந்தப்பட்ட படங்களின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்களின் நட்புக்காகத்தான் அவர் ஒப்புக்கொள்கிறார்.

தற்போது அக்க்ஷய்குமார் நடித்துவரும் படத்திலும் ஒரு பாடல்காட்சியில் தோன்ற அவர் ஒப்புக்கொண்டது கூட அந்த நட்பின் அடிப்படையில் தான்.. சல்மான் செட்டிற்கு வந்ததும் படப்பிடிப்புக் குழுவினருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

ஆனால் நடந்ததோ வேறு.. சல்மான் கானுக்கு உரிய மரியாதையை அக்க்ஷய்குமாரும் படத்தின் இயக்குனரும் அளித்ததாக தெரியவில்லை. பாடல் காட்சிகளில் அக்க்ஷய் குமாருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டது. சல்மான் கானுக்கு முக்கியத்துவம் இல்லாத வரிகளின் மீது தான் காட்சிகள் வைக்கப்பட்டன.

ஆனால் இதை சட்டென்று உணர்ந்துகொண்ட சல்மான் கான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் செட்டைவிட்டு கிளம்பிவிட்டார். பின்னே.. மரியாதை இல்லாத இடத்தில் அவருக்கு என்ன வேலை..? அதன்பின் அக்க்ஷய் குமாரையும் மீதம் இருந்த நடிகர்களையும் வைத்து அந்த பாடல் காட்சியை ஒருவழியாக ஒப்பேற்றி இருக்கிறார்கள்.

1989ல் தமிழில் சூப்பர்ஸ்டார் நடித்த ‘மாப்பிள்ளை’ திரைப்படம் வெளியானது. அதில் ரஜினியின் நட்புக்காக தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.. ரஜினிக்கு திருமணம் நடக்க இருப்பதால் அதற்கு பாதுகாப்பிற்காக வரும் அவரது நண்பரான சிரஞ்சீவி, எதிரிகளை அடித்து துவைக்கும் காட்சி தான் அது..

இதில் எந்த ஒரு இடத்திலும் ரஜினியின் தலை தென்படவே இல்லை.. முழுக்க முழுக்க சிரஞ்சீவியின் ஆதிக்கம் தான். தியேட்டரில் அந்தக்காட்சிக்கு விசில் அடிக்காத ரஜினி ரசிகன் பாக்கி இல்லை.. அந்த மரியாதையை சக நடிகருக்கு கொடுக்க தெரிந்ததால்தான் அவர் இப்போதும் சூப்பர்ஸ்டார்.. சல்மான் கானின் பெருந்தன்மையை அக்க்ஷய்குமார் அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டது உண்மையில் துரதிர்ஷ்டமான செயல் தான்.

Akshay KumarChiranjeeviJai HooMaapillaiRajinikanthSalman KhanWanted
Comments (1)
Add Comment
  • helpdesk informática

    260047 285863Normally I do not read post on blogs, but I wish to say that this write-up quite forced me to try and do so! Your writing style has been surprised me. Thanks, quite good article. 677038