உங்கள் பெயர் சலீமா..? அப்ப விஜய் ஆண்டனி உங்களை கூப்பிடுவார்..!


‘நான்’ படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தான் நடித்துவரும் ‘சலீம்’ படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி நடித்துவருகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இந்தப்படத்தில் சலீம் என்ற டாக்டராக விஜய் ஆண்டனி நடிக்கிறார். நிர்மல்குமார் இயக்கும் இந்தப்படத்தில் ஆகாஷ் பரதசானி என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் முக்கால்வாசி முடிவடைந்துவிட்ட நிலையில் இசை வெளியீட்டு விழாவை வரும் ஜூன்-5ஆம் தேதி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இந்த இசைவெளியீட்டு விழாவையொட்டி ரசிகர்களுக்காக ஒரு போட்டியையும் அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.

படத்தில் விஜய் ஆண்டனியின் பெயர் சலீம். அதனால் சலீம் என்கிற பெயர் உள்ள ரசிகர்களை சந்திக்க முடிவு செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. உங்கள் பெயர் சலீமா.. ? அப்படி என்றால் உடனே தாமதிக்காமல் உங்களைப்பற்றிய விபரங்களை அலைபேசி எண்ணுடன் கீழ்க்கண்ட இ-மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்..

விஜய் ஆண்டனி உங்களை கூப்பிடுவார் salimmeetssalim@gmail.com

Akash BarathasaniFathima Vijay AntonyNaanSaleemSalimStudio 9Vijay AntonyVijay Antony Film Corporation