ஐந்தே நாட்களில் போட்ட காசை அள்ளினார் ‘சலீம்’..!

ஒரு படத்தை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளராகட்டும் அல்லது விநியோகஸ்தராகட்டும் எடுத்ததுமே முதலில் லாபத்தை எதிர்பார்க்கமாட்டார்கள்.. எம்.ஜி என்கிற மினிமம் கியாரண்டி வசூலை டச் பண்ணவேண்டும் என்பதுதான் அவர்களின் முதல் ஆசை..

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஐந்தே நாட்களில் ‘சலீம்’ அதை சாதித்திருக்கிறது. மேலும் இஸ்லாமிய தாய்மார்கள் நிறைய பேர் படத்தைப்பற்றி கேள்விப்பட்டு தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்களாம்.

நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை என பக்காவாக வெளியான சலீமுக்கு இந்தவாரம் இன்னும் தியேட்டர்களை கூட்டியிருக்கிறார்கள். நேற்று இந்தப்படத்தின் வெற்றிச்சந்திப்பின்போது பத்திரிகையாளர்களை சந்தித்த ‘சலீம்’ படத்தின் வெளியீட்டாளர் ஸ்டுடியோ-9 சுரேஷ் இந்த தகவலை தெரிவித்தார்..

சலீம்விஜய் ஆண்டனி