தற்காப்பு’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘7 நாட்கள்’ என்கிற இன்னொரு அதிரடி கதையில் நடிக்க இருக்கிறார் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாஉ.. ஆச்சர்யமாக இந்த கதையை எழுதியிருப்பது பி.வாசுவின் தம்பியான விமல் பீதாம்பரம் தான்.. அதேபோல அப்படத்தை இயக்க இருப்பது விமல் பீதாம்பரத்தின் மகன் கௌதம் தான்.
இவர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்.. இந்தப்படத்தில் சக்திவேல் வாசு தவிர கணேஷ் வெங்கட்ராம், நிகிஷா படேல், அங்கனா ராய் , எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின், ஆரம்ப விழா, பூஜையுடன் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பி.வாசு, “இப்போது சக்திவேல் நடிக்கும் படத்தின் கதைகளை எல்லாம் நான் தான் கேட்பதாக சொல்கிறார்கள்.. ஆனால் அதில் உண்மை இல்லை. அவர் மட்டுமே கதை கேட்கிறார்.. தேவைப்பட்டால் மட்டும் என்னிடம் பகிர்ந்துகொள்வார்.. ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை பற்றிய கதையை மட்டும் நான் தெரிந்து கொள்வது உண்டு.. காரணம் சொன்னபடி படத்தை எடுப்பார்களா, அவர்களால் படத்தை வெளியிட முடியுமா என்பதற்காகத்தான்” என கூறினார் பி.வாசு.