“சைத்தான் குடும்பத்தினருக்கு வணக்கம்” ; எஸ்.ஏ.சி தமாஷ்..!


சமீபகாலமாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக மாறியுள்ள இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘சைத்தான்’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அருந்ததி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது..

இந்த விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சிபிராஜ் உள்ள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.. தான் இயக்கிய ‘சுக்ரன்’ படம் மூலம் விஜய் ஆண்டனியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்கிற முறையில் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் விழாவுக்கு தனது மனைவி ஷோபாவுடன் வந்திருந்து வாழ்த்தினார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்..

அவர், மேடையில் பேசும்போது வந்திருந்தவர்கள் அனைவர்க்கும் வணக்கம் சொல்லி வந்தார்.. அப்போது ‘சைத்தான்’ படத்தில் பணியாற்றியவர்களை பற்றி குறிப்பிடும் விதமாக “சைத்தான் குடும்பத்தை சேர்ந்தவர்களே” என தமாஷாக குறிப்பிட்டார். மேலும் தனது மகன் விஜய்யின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சி அடைவதுபோலவே தான் அறிமுகப்படுத்திய விஜய் ஆண்டனியின் வெற்றியையும் பார்த்து சந்தோஷப்படுவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் எஸ்.ஏ.சி.

S A CSaithanVijay Antonyஏ.சிசைத்தான்