‘மாரி-2’வில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி..!

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ என்கிற ஒரே படம் மூலம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழி ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி.. சமீபகாலமாக ஆந்திராவிலும் கலக்கி வருகிறார். தற்போது தமிழில் நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக ‘கரு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் சாய்பல்லவி.

‘பிரேமம்’ படத்தில் அவர் பாப்புலரானதுமே, தமிழில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் உடனடியாக அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால் இப்போது பாலாஜி மோகன்-தனுஷ் கூட்டணியில் ‘மாரி-2’வில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இதை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் சாய்பல்லவியை பார்க்கலாம் என்றே தெரிகிறது.

சாய்பல்லவிதனுஷ்பாலாஜி மோகன்பிரேமம்மாரி-2