எஸ்.ஏ.சி ஆக்சன் ஹீரோவாக நடிக்கும் ‘நையப்புடை’..!


7௦ வயதில் ஏற்கனவே ஹீரோவாக நடித்து நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.. சரி அந்தப்படத்துடன் தனது நடிப்பு ஆசையை நிறுத்திக்கொண்டாரோ என்று நினைத்த வேளையில், புலி பதுங்கியது பாய்வதற்குத்தான் என்கிற மாதிரி இப்போது ‘நையப்புடை’ என்கிற படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஏ.சி. உடன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் பாடலாசிரியர் பா.விஜய்.

ஆச்சர்யமான இன்னொரு விஷயம் இந்தப்படத்தை நேரடியாக தயாரிக்கிறார் கலைப்புலி தாணு. விஜய்யை வைத்து படம் தயாரிக்கும் அதே வேளையில் அவரது தந்தையை வைத்தும் படம் தயாரிக்கும் நெஞ்சுரம் கலைப்புலி தாணுவுக்கு மட்டுமே உண்டு. படத்தை இயக்குவதும் எஸ்.ஏ.சியின் சீடரான விஜய் விக்ரம் தான்.

எஸ்.ஏ.சந்திரசேகர் 70 வயது நிரம்பிய அதே நேரத்தில் தவறுகளை கண்டு வெகுண்டெழும் கோபக்கார கிழவனாக அதிரடி கதாபாத்திரத்திலும், பா.விஜய் வேகமான துடிப்புள்ள இளம் ரிப்போர்ட்டராகவும், நான் கடவுள் ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த வில்லனாகவும், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கிருமினலான போலீஸ் அதிகாரியாகவும், ஆரோகணம் விஜி புரட்சிகரமான ஏழைத் தாயாகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Kalaipuli DhanuM.S. BaskarSACVijayVijay Vikram