‘சாமி’யின் வேட்டை தொடர உதவப்போகும் கதாநாயகி இவரா..? அவரா..?

இயக்குனர் ஹரி, போலீஸ் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் ஆனதற்கு பிள்ளையார் சுழி போட்ட படம் தான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’.. இந்தப்படத்தின் என்ட் கார்டில் சாமியின் வேட்டை தொடரும் என குறிப்பிட்டு அப்போதிருந்தே இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்களை எதிர்பார்க்க வைத்தார்..

ஆனால் அதன்பிறகு இன்னொரு ஆக்சன் போலீஸாக துரைசிங்கத்தை உருவாக்கி, அதற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பில் அதன் மூன்று பாகங்களையும் இயக்கி வெற்றியையும் ருசித்துவிட்டார்.. இப்போது ரசிகர்களுக்கு இயல்பாகவே ‘சாமி’யின் இரண்டாம் பாகத்தின் மீது ஆர்வமும் ஆசையும் எழுந்துள்ளது. இயக்குனர் ஹரியும் கூட, இனிமேலும் ரசிகர்களை சோதிக்க விரும்பாமல் ‘சாமி-2’வின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

சிங்கம் படத்தின் மூன்று பாகங்களுமே ரசிகர்களை ஈர்க்க முக்கிய காரணமாக இருந்தது குறிப்பாக கதாநாயகி அனுஷ்கா உட்பட முதல் பாகத்தில் நடித்தவர்களின் பங்களிப்பு மூன்று பாகங்களிலும் தொடர்ந்ததுதான். இதுதவிர அடுத்தடுத்த பாகங்களுக்கு ஹன்ஷிகா, ஸ்ருதிஹாசன் என கதைக்கு தேவைப்பட்டாற்போல் இணைத்துக்கொண்டார் ஹரி.

அந்தவகையில் ‘சாமி’ படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷா இதிலும் தொடர்வாரா என்கிற கேள்வி ஒரு பக்கம் இருக்க, படத்தின் கமர்ஷியல் வேல்யூ கருதி இன்னொரு நாயகியும் ‘சாமி-2’வில் இணையவிருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது..

அந்த இன்னொரு கதாநாயகியாக நடிக்க ராகுல் ப்ரீத் சிங் மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோரிடம் பேசப்பட்டு வருகிறதாம்… அனேகமாக இவர்களில் யாரோ ஒருவர் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள் என்றே தெரிகிறது.

HariSaami 2Vikramஅனுஷ்காகேத்தரின் தெரசாசாமிசாமி 2சிங்கம்த்ரிஷாராகுல் ப்ரீத்ராகுல் ப்ரீத் சிங்விக்ரம்ஸ்ருதிஹாசன்ஹன்ஷிகாஹரி