‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டி செல்லம்’ ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘சாலை’. ‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கிரிஷா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
‘சாலை’ படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. காரணம் சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் கதைதான் படம். இப்போதுள்ள அசாதாரணத் சூழலில் காஷ்மீரில் தாங்கள் சுற்றித்திரிவது போல் காதலர்கள் கற்பனையில் கூட கனவு காண அஞ்சுகிறார்கள்;
இந்த சூழலில் காஷ்மீர் பகுதியில் 45 நாட்கள் பனி கொட்டிக் கிடக்கும் நிலப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறது ‘சாலை’ படக் குழு.படத்தின் கதையில் 90 சதவிகித காட்சிகள் காஷ்மீரில்தான் நடக்கும். மீதி 15 நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்திவந்த இயக்குனர் சார்லஸ் சொல்லும் திகில் அனுபவங்களை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்.