சாலை’ படத்திற்காக ஆபத்தான காஷ்மீர் பயணம்..!


நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் தற்போது ‘சாலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இந்தப்படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெரும் பனிப்பொழிவு கொட்டும் காலத்தில் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டு முழுப்படத்தையும் படமாக்கியுள்ளனர்.

இதுவரைக்கும் காஷ்மீரில் இந்திய சினிமாக்கள் பெரும்பாலும் சாதாரண தட்பவெப்பம் இருக்கும் கால நிலைகளில் படமாக்கிவிட்டு திரும்பி விடுவர். அதுவும் ஒரு சில பகுதிகளையோ, காட்சியையோ படமாக்கிவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால் ‘சாலை’ படத்திற்காக தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் கூட படமாக்கியிராத ஆபத்தான கொட்டும் பனிப்பொழிவிற்கிடையே 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளார்கள்.

“ராணுவ பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு நடுவே மிகவும் சிரமப்பட்டுதான் படமாக்க முடிந்தது. எங்கள் படக்குழுவே உயிரோடு திரும்புவோமா என்ற பெரும் பீதியுடனே அங்கிருந்த ஒவ்வொரு நாளும் கழிந்தது. வழக்கமாக அனைத்து படங்களிலும் பனியை அழகு காட்சிக்காகவே பயன்படுத்தி இருப்பர். ஆனால் ‘சாலை’ படத்தைப் பொருத்தவரை ‘பனி’ என்பதுதான் கதையின் த்ரில்லிங் பாயிண்ட்” என்கிறார் இயக்குனர் சார்லஸ்.

எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ’ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Attachments area

CharlsSaalaiVishwaசார்லஸ்விஸ்வா