ஒருவழியாக கதாநாயகியை கண்ணில் காட்டினார் பிரசாந்த்..!

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த, ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக் தான் தற்போது பிரசாந்த் நடிப்பில் ‘சாஹசம்’ ஆக மாறிவருகிறது. அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப்படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலிய அழகி அமண்டா நடிக்கிறார்.

கடந்த எட்டு மாதங்களாக இந்தியா முழுவதும் தேடி, அமண்டாவை கண்டு பிடித்து கதாநாயகி ஆக்கி உள்ளார் நடிகர் தியாகராஜன். இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா பாலே நடனத்தில் பல பரிசுகளை வென்றவர்.

நீளமான வசனங்களை கூட நொடியில் மனப்பாடம் செய்துகொண்டு, வசனத்திற்கேற்ப உச்சரிப்புடன் நடிப்பில் வெளுத்து வாங்கிய அமண்டாவின் நடிப்பு, உடன் நடிக்கும் நாசரையே அசர வைக்க, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றுமொரு ரோஜா என மனம் திறந்து பாராட்டினாராம்.

அமண்டாஅல்லு அர்ஜூன்சாஹசம்ஜூலாயிபிரசாந்த்