இதற்குமுன் சமீபத்தில் வெளியான சூர்யாவின் ‘24’ படத்தைவிட அடுத்து அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகிவரும் ‘S-III’ படத்திற்குத்தான் பல மாதங்களுக்கு முன்பிருந்தே, ஏன் சில வருடங்களாகவே உச்சபட்ச எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.. காரணம் ஏற்கனவே சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களில் சூர்யா-ஹரி கூட்டணி தந்த அதிரடி வெற்றிதான்.
அந்தவகையில் விறுவிறுவென தயாராகி வருகிறது ‘S-III’. பொதுவாக சூர்யா படங்களுக்கு தெலுங்கிலும் மலையாளத்திலும் எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்தவகையில் ‘S-III’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமை ரூ.3.6 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.