‘கணிதன்’ ஷூடிங்கை முடித்துவிட்ட அதர்வா, அடுத்ததாக ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை இயக்கிய ராஜ்மோகன், டைரக்சனில் நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இந்தப்படத்திற்கு என்ன டைட்டில் வைத்திருக்கிறார்கள் தெரியுமா..? ‘ருக்மணி வண்டி வருது’.
சுமார் 30 வருடங்களுக்கு முன் வெளியான ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ என்கிற படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடலான ‘ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது’ என பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி, மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்த ஹிட் பாடலின் முதல் வரியையே டைட்டிலாக வைத்துள்ளார் இயக்குனர் ராஜ்மோகன்.
ஒரு மலைப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட, கிராமத்து இளைஞனான அதர்வா, தனது முயற்சியால் ஒரு ஜீப்பை அந்த கிராமத்து கொண்டு வருகிறார். அந்த ஜீப்பை மையப்படுத்தியே கதையும் அமைந்திருப்பதால் படத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என அப்படியே வைத்துவிட்டார்கள்.