“ரொம்ப ரிகர்சல் பண்ணினால் ரியலா இருக்காது ” ; ரித்திகா ஸ்ரீனிவாஸ்

வழக்கு எண் , நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ்.. தற்போது வெளியாகியுள்ள டிக் டிக் டிக் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டிக் டிக் டிக் இதற்கடுத்து இரண்டு மலையாள படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் இவரை வெப் சீரீஸ்லயும் நடிக்க கூப்பிட்டு இருக்கிறார்களாம்.

எவ்வளவு நேரம் திரையில் என் கதாபத்திரம் வரும் என முக்கியமில்லை. ஒரு கதாநாயகனுக்கு வில்லன் தான் இருக்கனும் என்று நினைக்கிறார்கள் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வில்லனை வில்லியாக மாற்றலாம். தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் ஹோம் வோர்க் பண்ணுவது,டயலாக் முன்னாடியே பார்த்து மனப்பாடம் பன்னுறது இதுலாம் பண்ண மாட்டேன்.ரொம்ப ரிகர்சல் செய்தா உண்மை தன்மை இருக்காது.

மலையாளத்தில் குறைந்த அளவே ஆர்டிஸ்ட் இருக்கிறார்கள் எனவே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள்.ஒரு வாரத்தில் மூன்று படம் வெளியாகும் அதில் நடித்த கதாபாத்திர நடிகர்கள் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமா நடித்திருப்பார்கள் அது இன்னமும் தமிழுக்கு வரவில்லை விரைவில் வரும் என நம்புகிறேன்” என்கிறார் ரித்திகா ஸ்ரீனிவாஸ்.

Rithika Srinivasரித்திகா ஸ்ரீனிவாஸ்