தடையிருக்கும் நேரத்தில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ் ; நெகிழ வைக்கும் பின்னணி..!

கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான். அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது..

ஆம்.. டிச-2ஆம் தேதி ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை ரிலீஸ் செய்தார்கள். ஆனால் டிச-4ஆம் தேதியே அம்மா மறைந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர். தொடர்ந்து டிச-5ஆஅம் தேதி அம்மா காலமானதையடுத்து அந்தவாரம் முழுதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை..

அதற்கடுத்த வாரத்தில் வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்லபடம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது..

இந்த நிலையில் வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.

திரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப்படத்தின் நாயகன் ரிஜன் இதற்கான விளக்கம் கொடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவின் காரணமாக, இந்தப்படம் ஒரு வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேறவேண்டிய நிலை உருவானது.. படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை.ஆனாலும் இந்தப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை பார்த்துவந்தோம்.

இந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.

அந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது.

வரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும் தான் ரிலீஸ் செய்கிறோம்” என விளக்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.

Azhagendra solluku amudhaRijan Sureshஅழகென்ற சொல்லுக்கு அமுதா – விமர்சனம்