‘இவன் வேற மாதிரி’ படத்திற்கு பிறகு, தான் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை அடுத்து இரண்டாவது முறையாக ஜெய்யுடன் கைகோர்க்கிறார் சரவணன். ஆக்ஷன் ரொமாண்டிக் கலவையாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா.
இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து தான் இயக்கிய ‘இவன் வேற மாதிரி’ படத்தை கன்னட்த்தில் ரீமேக் செய்து இயக்குகிறார் சரவணன். விக்ரம் பிரபு நடித்த கேரக்டரில் அங்கே கதாநாயகனாக நடிக்கிறார் புனித் ராஜ்குமார்.