நஸ்ரியாவின் உறவினர் ஆனார் ‘ரோஜா’ மதுபாலா

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி மோகன். சொல்லப்போனால் குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழைய எளிதாக வழிவகுத்து கொடுத்தவர் இவர்தான். இப்போது தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்குகிறார் பாலாஜி மோகன்.

மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.

இந்தப்படத்தின் மூலம் ரோஜா, ஜென்டில்மேன் படத்தில் நடித்த நடிகை மதுபாலா தமிழ்சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகிறார். இந்தப்படத்தில் நஸ்ரியாவின் உறவினராக, ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மதுபாலா. மூணாரில் நடைபெற்றுவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் வரும் 19ஆம் தேதி முதல் கலந்துகொள்ள இருக்கும் மதுபாலா தமிழில் அறிமுகமாகிய முதல் படமான ‘அழகன்’ படத்தின் படப்பிடிப்பும் இதே மூணாரில் தான் நடந்தது

இந்தப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாலாஜி மோகன். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். இவர்தான் பாலாஜி மோகனின் முதல் படமான ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தையும் தயாரித்தவர்.

நஸ்ரியாமதுபாலா
Comments (1)
Add Comment
  • buy magic mushroom online in usa

    88550 959523Thank you for your amazing post! It has long been really insightful. I hope that you will continue sharing your wisdom with us. 314699