‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ – வெளியிடுகிறது ரெட்ஜெயண்ட்..!

 

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் நகுலும் ‘அட்டகத்தி’ தினேஷும் ஹீரோக்களாக நடிக்க, கதாநாயகியாக நடிக்கிறார் பிந்துமாதவி. நகைச்சுவை நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூமியை நோக்கிவரும் காந்தப்புயலால் தகவல் தொழில்நுட்பமும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்கிற புதுமையான கதைக்களத்தை இந்தப்படத்திற்காக எடுத்துள்ளார் இயக்குனர் ராம்பிரகாஷ்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அனேகமாக பிப்ரவரியில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அட்டகத்தி’ தினேஷ்சதீஷ்தமன்தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்நகுல்பிந்துமாதவிராம்பிரகாஷ்.ரெட்ஜெயண்ட்