திருடன் போலீஸ் படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் ராஜூவுடன் அட்டகத்தி தினேஷ்-பாலசரவணன் மீண்டும் கூட்டணி சேர்ந்து நடித்துள்ள படம் ‘உள்குத்து’. ‘அட்டகத்தி’ நந்திதா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துல்லாது கூடுதல் சிறப்பு. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, விட்டல்குமார் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப்படம் தயாராகி ஒரு வருட காலமாகியும், இரண்டு மூன்றுமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அது தள்ளிப்போநாதன் காரணத்தையும் வரும் டிச-29ல் இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது என்றால் அதற்கு யார் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதையும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.
“இந்த படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி நான் வெளியிடுகிறேன். அவருடைய சூழ்நிலையால் அவரால் இப்படத்தை வெளியிட முடியவில்லை. அவரது சூழ்நிலை என்னையும் பாதித்ததால், என்னாலும் இந்த ஒரு வருடமாக படத்தை வெளியிட முடியவில்லை. இத்தனையும் தாண்டி இப்போது ‘உள்குத்து’ திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும், விஷால் சாரும் தான். படம் வெளியாகுமா என்ற நிலை இருந்த போது விஷால் சார் தலையிட்டு தன்னுடைய படத்தை போல் நினைத்து இப்படத்தை வெளியிட்டு தந்துள்ளார்.
உள்குத்து படமானது தற்போதைய நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறும் படமாக இருக்கும். ஒரு நாளுக்கு ஒரு குடும்பம் கந்து வட்டியால் பாதிப்பு அடைகிறது. அதில் ஒரு குடும்பம் எப்படி கடனால் பாதிக்கப்பட்டு அதை எப்படி சமாளித்து அதிலிருந்து மீண்டுவருகிறார்கள் என்பது படத்தின் கரு. இது கந்து வட்டி பற்றி அழுத்தமான கருத்து சொல்லும் படம்.
இது வரைக்கும் நடித்த படங்களில் இருந்து தன்னை மாறுபடுத்தி காட்டியுள்ளார் தினேஷ். படத்தின் முக்கிய வில்லனாக நடித்துள்ள திலீப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். படத்தில் மொத்தம் எட்டு சண்டைகள் உள்ளது. அனைத்துமே பார்ப்பவர்களுக்கு நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை தரும். எந்த ஒரு நல்ல விஷயத்தையும், தீய சக்தியால் கட்டுப்படுத்த முடியாது. சில சூழ்நிலையால் படதின் வெளியீடு தள்ளிப்போனது கடவுளின் அருளால் வரும் டிசம்பர் 29ல் கண்டிப்பாக வெளியாகும்” என்றார் உள்குத்து படத்தின் தயாரிப்பாளர் விட்டல்குமார்.